<$BlogMetaData$>

வெற்றியை நோக்கி

 
இறை வசனம்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஓரு பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர்,உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினேம் (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்,(யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் (49:13)
வருகையாளர்கள்


CURRENT MOON
நபி(ஸல்) பற்றி அனிமேசன் திரைபடம்(Mohammad "The Last Prophet")
Saturday, March 3, 2007
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகிலேயே முதல் முறையாக முழுநீள அனிமேஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் புகழ் பெற்ற இஸ்லாம் சேனல் மற்றும் அமெரிக்காவின் Fine Media Group இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு Mohamed(PBUH): The Last Prophet - இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) என்று பெயரிடப்பட்டுள்ளது
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்திறங்கிய நிகழ்வுகள் உள்பட, தூய இஸ்லாத்தை அரேபிய மண்ணில் விதைக்க நபியவர்கள் செய்யும் முயற்சிகளும் அதில் வழி நெடுகிலும் சந்தித்த துயரங்களையும் விவரிக்கிரது இத்திரைப்படம்.


இறைத்தூதரை ஓவியமாக வரைதலும் கற்பனை உருவகங்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் - இறைத்தூதரின் உருவகம் இல்லாமை என்பது ஒரு குறையாக பார்ப்பவர் மனதில் தெரிந்தாலும், இஸ்லாத்தின் ஆரம்பகால சரித்திரத்தை அழகாக விளக்கியிருக்கும் முறைகளினால் ஆழமான ஒரு மன நிறைவைப் பெற முடிகிறது.


நபிவழித் தொகுப்புகளின் அடிப்படையில் சம்பவங்கள் அமைந்திருக்கும் இத்திரைப்படம், இஸ்லாமிய வரலாற்றைக் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் வகையில் எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.



புதிதாக இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கும் இஸ்லாத்தை அறிய விரும்புவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் வியப்பில்லை.






இத்திரைப் படத்தை முலுமையாக கானலாம்
posted by சாதிக் @ 2:04 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
மலர்ந்தவை
About me
மாதம் வாரியாக
இஸ்லாமிய இணையதளம்
நன்றி
Linked to IslamKalvi.com

                     

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: 2996;்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது