<$BlogMetaData$>

வெற்றியை நோக்கி

 
இறை வசனம்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஓரு பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர்,உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினேம் (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்,(யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் (49:13)
வருகையாளர்கள்


CURRENT MOON
தமிழக முஸ்லிம் VS தொப்பி
Saturday, March 10, 2007
"தலையில் தொப்பியோ அல்லது துனியோ அனியாமல் தொழும் ....எவரும் இப்பள்ளில் தொழ அனுமதிக்க பட மாட்டார்கள்,மீறி தொழுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும்"

மேற்கண்ட அறிவிப்பு பலகையை தமிழகத்தின் பெரும்பாளான பள்ளிகளில் காணமுடியும். தொப்பி அனிவது இஸ்லாதின் கடமையான ஒன்று என்பது போல சித்தரிக்கும் இது போன்ற விசம பிரசாரத்திக்கு தமிழக மார்க அறிஞர்கள், உலமாக்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள எப்படி அங்கீகரிக்கிரார்கள் என்பது விளங்கவில்லை.
இத்தகைய விசம பிரசாரத்தினால் சமுதாயத்தில் ஏற்பட்டிக்கும் சண்டை,சச்சரவு,பிரிவினைதான் எத்தனை... எததனை.... .
தொப்பி அனிவது தொழ அனுமதிக்க முடியாத அலவிற்கு அத்தனை வலியுறுத்தபட்ட கடமையான ஒன்றா?
தன் மானத்தை மறைத்து கொள்ளவும் பருவநிலை மாற்றங்களில் இயற்கையின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாக்கவும் மனிதன் ஆடையை அனிய தொடங்கினான். பருவ காலங்கள் மாறி மாறி வருவதால் ஆடைகலும் அவ்வாரே அனிய வேண்டியா கட்டாயம் ஏற்பட்டது . குளிர் பிரதேசங்களிள் வசிப்பவர்கள் மிக தடிமணான ஆடைகளை அனிகிறார்கள். வெப்பமான பிரதேசன்களிள் வாழ்பவர்கள் மெல்லிய ஆடைகலை அனிகிறார்கள்
மனிதனின் உடல் உறுப்புகளை மறைக்க பிரத்தியோக ஆடைகளை(கை உறை, கால் உறை) போன்று , வெப்பத்தில் இருந்தும், கடும் குளிரில் இருந்த்தும் தலையை பாதுகாக்கும் கவசாமாக தொப்பி என்ற ஆடையை மனிதன் அனிய தொடங்கினான்.

குளிர் பிரதேசங்களில் குளிர் ஊடுருவாமள் காதுவரை மூட பட்ட தொப்பியை அணிய தொடங்கிய மனிதன் வெப்பமான பாலைவன பிறதேசங்களிள் வீசும் மணல் காற்றிலிருந்து தலையை பாதுகாக்க தொப்பி மட்டும் பாதுகாப்பில்லை என்ரு அதன் மேல் துண்டையும் சுற்றிகொள்ள வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது. பாலை வனங்களிள் வெப்பம் மற்றும் குளிர் இரண்டும் கடுமையாக இருப்பதால் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு தேவை என்று தொப்பியை அனிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாலைவன பிரதேசமான அரபு நாடுகளில் முஸ்லிம்கல் அனியும் ஆடை வகையான தொப்பி இன்று இஸ்லாத்தின் அடையாலமாக மாற்றபட்டு வணக்க வழிபாடுகளில் கண்டிப்பாக தொப்பி அனிந்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் உலமாக்கள் என்று தங்கலை சொல்லிகொள்பர்கள் கூரும் உப்புசப்பில்லாத காரணங்கள்:

1. தொழுகையின் போது தலை மறைக்க பட வேண்டிய ஒன்று எனவே தொப்பி அனியவேண்டும்

இவர்கள் கூருவதுபோல் எந்த ஒரு ஆதரத்தையும் திருமறையிலோ, நபி(ஸ்ல்) அவர்களின் பொன்மொழியிலோ காணமுடியாது.

2.எல்லோரும் தொப்பி அனிந்து தொழும் போது ஒழுங்கு (unifrom)கடைபிடிக்கபடிகிறது

அப்படியானாள் இது ஆடை விசயங்கலுக்கும் பொருந்துமல்லவா? , எலோரும் ஒரே நிரத்தில் ஆடை அனிந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் அவ்வாரு இவர்கள் மார்க தீர்ப்பு கொடுத்தாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை

3. தொப்பி அனியாமல் தொழுபவர்களாள் மற்றவற்கள் கவனம் சிதற்கிறது எனவே தொப்பி அனிய வேண்டும்.

தொப்பி அனியாததாள் மற்றவர்கள் கவனம் எவ்வாரு சிதரும்? வேண்டுமாளால் அப்பள்ளி நிர்வாகிக்கு தங்கள் அறிவிப்பை மீறி ஒருவர் தொப்பி இல்லாமல் தொழுகிரார் என்ரு அவருடையா கவனம் சிதரலாம்.

இன்றைய கால கட்டத்தில் நமது சமுதாயம் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு தனி தனி பிரிவுகளாக பிரிந்து எதை சாதிக்க போகிரோம் என்ரு அவர்கலுக்கே தெரியாமல் தவித்துகொண்டிருக்கிரார்கள். அவர்ளை ஒருங்கினைத்து வழிநடத்தவேண்டிய நமது தமிழ்க உலமாக்கள் , யார்மீதோ கொண்ட விருப்பு வெருப்புக்கலை, கருத்து வேருபாடுகளை மார்கம் என்ற பெயரில் வெளிபடுத்தி நம் சமுதாயத்தை மேழும் சீரழிக்க போட்டி கொண்டிருகின்றனர்.

இது போன்ற அற்ப விசயங்கலுக்காக அல்லாஹ்வின் பள்ளிக்கு வரும் அடியார்களை தடுப்பது அறிவீனம் மற்றுமின்றி அல்லஹ்வின் கடும் கோபத்திக்கு ஆலாககூடியது,
திருமறையில் இறைவன் கூருகிரான்


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரை சொல்லி துதிப்பதை தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைகாரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வின் இழிவுதான் மேலும், மறுமையில் இவர்கலுக்கு கடுமையான வேதனையும் உண்டு
(2:114)

மேற்கன்ட தெல்ல தெளிவான இறைவனின் வசனம் நமது உலமா பெருமக்களுக்கு கான கிடைக்கவில்லையா?
இன்று அரபு நாடுகளில்கூட ஒழுக்க சீரழிவுகள் பெருகிகொண்டுதான் இருக்கிரது இருப்பினும் இறை வணக்கத்தில் யாரும் யாரையும் கட்டுபடித்துவது கிடையாது, உலகில் பலதரபட்ட மொழி,பழக்க வழக்கங்கள் கொண்ட மக்களும் ஒரே பள்ளிவாசலில் தொழும்போது நீ வணங்குவது முற்றிலும் தவறு என்று சொல்லி பள்ளிவாசலை விட்டுத் துரத்துவது கிடையாது, ஏன் இங்கு மார்க அறிஞர்கள், உலமாக்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு தமிழ் நாட்டு உலமாக்கள் போன்ரு போதிய மார்க அறிவு இல்லையா?

இங்கு ஒரு சட்டம் இயற்றினால் ஏன் என்று யாராலும் கேள்வி கேட்ககூட முடியாது அப்படி இருந்தும் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் கான படும் அறிவிப்பு பலகை போன்று இங்கு எங்கும் காணமுடியவில்லையே ஏன்?


இன்றைய நூற்றான்டில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவும் மார்கம் (135%) நமது இஸ்லாம் தான். ஓவ்வோரு நாளும் ஆயிரகணக்கிள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வாக ஏற்றுகொள்கின்ரனர். இதக்கு முக்கிய காரனமாக இஸ்லாத்தில் மற்ற எந்த மதத்திலும் இல்லாத சகோதரதுவம், இறை வேதம் என்பதை நிருபிக்கும் அறிவியலோடு ஒத்துபோகும் குர் ஆன் கூரும் உன்மை,சாதி வேருபாடற்ற சமத்துவம்.. இப்படி சொல்லிகொண்டே போகலாம். இதில் முஸ்லிம்கலின் நடவடிக்கைகலும் மற்ற மததவர் இஸ்லாத்தை ஏற்பதர்க்கும், எதிர்பதற்க்கும் முக்கிய காரணங்களிள் ஒன்றாகிறது எனவே இதுப்போன்ற இஸ்லாத்தில் வலியுருத்தபடாத , சம்பந்தம் இல்லாத விசயங்களில் முக்கியதுவம் கொடுத்து சமுதாயம் பிளவுபட ஒரு காரணமாக ஆகாமல் இனிவரும் காலங்களில் நமது தமிழக உலமாக்கள் இருக்கவேண்டும்.

உலமாப்பெருமக்களே, மார்க்க அறிஞர்களே இங்கே சொல்லப்பட்ட கருத்துக்கலை நன்றாக ஆராய்ந்து எந்த முடிவுக்கும் வாருங்கள்.மீண்டும், மீண்டும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கிணற்றுத் தவளைபோல் செயல் படவேண்டாம்.

இனிமேலும் மேற்சொன்ன வாசகங்கள் பள்ளிவாசல்களில் நீடித்துக்கொண்டிருப்பதை சம்பந்தப்பட்டவர்க்ள் தடுப்பதுதான் மிகநல்லது. உண்மையான இறைனேசர்கள் இதைத்தான் விரும்புவார்கள்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் மன்னித்து நம் அனைவறையும் ஈருலகிலும் மேன்மையோடு ஆக்கிவைத்து அவனது வல்லமை மிக்க மகத்தான சொர்க்கத்தில் சிறப்பான
இடத்தைத்தந்து காப்பாற்றிவைப்பானாக ஆமீன்.

அல்லஹ்வின் மஸ்ஜிதிகளை பரிபாலனம் செய்யகூடியவர்கள், அல்லாஹ் மீதும் இருதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையை கடைபிடித்து ஜாகாத்தை (முறையாக) கொடுத்து அல்லஹ்வை தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம்- இத்தகையவற்கள்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவற்களிள் ஆவார்கள்
(9:18)



நன்றி: A.S.Mohamed Iqbal

Dubai
















posted by சாதிக் @ 12:12 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
மலர்ந்தவை
About me
மாதம் வாரியாக
இஸ்லாமிய இணையதளம்
நன்றி
Linked to IslamKalvi.com

                     

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: 2996;்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது