<$BlogMetaData$>

வெற்றியை நோக்கி

 
இறை வசனம்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஓரு பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர்,உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினேம் (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்,(யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் (49:13)
வருகையாளர்கள்


CURRENT MOON
ஒட்டகம் என்ற அதிசய பிராணி
Tuesday, March 27, 2007
அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்ட பொழுது, அமைதியாக குர்ஆனை சுட்டிகாட்டினார்கள் நபிகள் நாயகம்(ஸல்) ,இது பல விதங்களில் ஒரு மிகப் பெரும் அற்புதமே, உதாரணத்திற்கு இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்,
(ஒட்டகத்தை பார்க்கவில்லையா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது-அல்குர்ஆன் 88:17) வாருங்கள் பதிலைப் பார்ப்போம்.



அதற்கு முன்பாக 'பரிணாம வளர்ச்சி' என்ற பைத்தியக்கார வாதத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது மரத்திலிருந்து இலையை மேய்வதற்காக தலையை உயர்த்தி முயற்சி செய்த ஒரு ஆட்டின் செயல், அதன் குட்டியின் மீது பிரதிபலிக்க, நீண்ட கழுத்தை கொண்ட ஆடு பிறந்தது. பிறகு தலைமுறைகள்(மாறி...மாறி...மாறி..) நாம் இன்று காணும் ஒட்டகச் சிவிங்கியாக மாறியது. அது போல் தான் மனிதனும் குரங்கிலிருந்து மாறியவன் என்ற அந்த வாதம். மற்றவைகளை பற்றி ஏதவது கிறுக்குதனமாகவாவது விளக்கம் கொடுக்கும் இந்த வாதன், ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்தி மாறி தற்போது உள்ள நிலையை அடைந்தது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்று வரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு அணுவுக்கும் பின்னாலும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். இந்த ஒட்டகம் ஒன்று போதும் அதை நிரூபிக்க, பாலைவனத்து அரபியைகளால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கபடும் இந்த அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.




படைத்தவனை பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் போது அதை திமிலாக்கிக் கொள்கிறது (45 kgs எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக, உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவசிக்கிம் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கறது.

உணவு மட்டும் கிடத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் சொய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீர் பத்து நிமிடகளுக்குள் குடித்து விடும்(pump).

குடிக்கும் நீரை இரத்ததின் சிவப்பு அணுக்களில் ஏற்றிக் கொள்கிறது. அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரித்து இடமளிக்கிறது. குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் வட்ட வடிவாக இருக்கும்.ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். மனிதர்களுக்கு உடல் 12% நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் ஒட்டகம் 40% இழந்தால் கூட எந்த பதிப்பும் இல்லாமல் வாழும். நீரிழப்பினால்ீடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன்) இரத்தம் பாகு நிலைக்கு வந்துவிடும். அதன் காரணத்தால் உடல் வாழ தேவையான இதமான சூட்டை தொலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம்( Explisive Heat Death) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகய்த்திக்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையுமே தவிர, அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும். நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அலவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.

அதன் உடல் சூடு 104 F டிகிரியை அடைய வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு வியர்வை வரும். அது வரை வியர்காது.(மனிதர்களுக்கு 98 F டிகிரி க்கு மேலே போனால் ஜுரம் என்று பெயர்)

ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிக பட்சமாக தாது கழிவுகள் 8 சதவிகிதம். 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40 சததிற்கு அதிகமாக கழிவும். குறைவான் நீரும் இருக்கும். அந்த அளவிற்கு குறைந்த அளவு நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.(நம்முடையதாக இருந்தால் கல் அடைப்பு ஏற்பட்டு வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சக்தி குறைய ஆரம்பித்தால், சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்து கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம்.

மற்ற பிராணிகளிம் (மனிதன் உட்பட) மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைபடும். ஒட்டகத்தின் மலத்தை பொட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்துவிடலாம் என்கிறார் மிருக ஆராய்சியாளர் டேவிட் ஆட்டன்பரே, அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
நம்முடையை மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனெற்றால் மற்ற எதற்க்கு இல்லத விசேச மூக்கு அமைப்புதான் காரணம். அதன் மூக்கிற்குள் அமந்திருக்கும் அடுக்கடுக்கான் திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேறும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது.

கடுமையான வெப்ப காளங்களில் உண்பதை குறைத்து கொண்டு உடம்பை இதமாக வைத்து கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படித்து கொள்ளும். நிழல் இல்லையென்றால் சூரியனை நேக்கி உடம்பை வைத்துகொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உலலில் படும்படியாக அதன் உடம்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது.அதற்கு காரணம் முட்டை வடிவான அதன் உடல் அமைப்பு ஆகும்.
ஒட்டகங்கள் கூட்டங்கூட்டங்களாக பிரிந்து கொண்டு நெருங்கிக் கொள்ளும். ஏனெனில் உடல் சூட்டை சுற்றுப்புற காற்றின் சூட்டை விட குறைவாக வைத்துக்கொள்ளும்.

அதன் உடலில் படர்ந்தது போல உள்ள உரோமங்கள் உடல் சூட்டை வியர்வையின் உதவி இல்லாமல் வெளியேற உதவுவதோடு வெளிசூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்து கொள்கிறது. ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளிம் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்.
இப்படியாக . சுவாசம், சிறுநீர்,வியர்வை,எச்சில் என்று அதன் மூலமாகவும் ஒரு துளி நீரை கூட வீணாக்கிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது. சரி, நீரை பார்த்தோம் மணலுக்கு போவோம் வாருங்கள்.

மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கிறது..ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது ( உதாரணம் Snow Shoes ஆகும்) அதன் இரு குழம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 680 Kg எடையுள்ள ஒட்டகம் 450 kg வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது(நாம் சில அடிகள் நடந்தால் நாக்கு தள்ளிவிடும்) குட்டி போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் ( Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணாலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகிறது

மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு. அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்னை பாதுகாக்கிறது.
அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது(Sun Class). ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம். பாலைவன்த்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்க்கு அதிகமான் நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

எங்கேயாவது தூரத்தில் உணவோ, நீரோ கிடைக்கும் பாலைவெளியில், அதை சிரமமில்லமல் தேடுவதற்கு அதன் நீண்ட கழுத்து(12 அடி) உதவுகிறது. பாலைவனத்தில் அதிகமான முட்செடி தான் கிடைக்கும் . அதை மேய்வதற்கு அழுத்தமான ரப்பர் போன்ற (முட்களே உடைந்துவிடும் அலவிற்கு கடினமான) )உதடுகள் கொண்டது ஒட்டகம். கிடைத்ததை தின்றுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது. அதிவும் அபரிதமான அளவு வைட்டமின் 'சி' யுடன்.



சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், பசித்தலும் புல்லை தின்ன மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், பஞ்சம் என்றால் , மீன், இறைச்சி,தோல், எதையும் தின்றுவிடும்.

வியர்வை,எச்சில் ஆகட்டும் 99 சதம் நீர் இருக்கும்.கழிவுகளும் அபரிவிதமான நீரை கொன்டதாக இருக்கும். சுவாசத்திலும் நீர் வெளியாகிறது. இது ஒட்டகத்திற்கு எப்படி தொரிந்தது? இந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாக தன் உடலை அமைத்துக் கொள்ள தெரிந்த ஒட்டகத்த்ற்கு அறிவிருந்தால் எங்கேயாவது நீரும், உணவும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தை நோக்கி ஓடியிருக்கலாம்.(மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்) முட்டாள் ஒட்டகம் பாலைவனத்தில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்காது. சரி பாலைவன சூழ்நிலைக்கு ஏற்ப ஒட்ட்கம் தானாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றே வைத்துக் கொள்வோம். அதன் படி பாலைவனத்தில் வசிக்கும் மனிதன் இது வரை பாதி ஒட்டகமாக மாறி இருக்கவேண்டுமே?

படைப்பாளன் உண்டா? அல்லது பரிணாம வளர்ச்சியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நன்றி: தமிழ்முஸ்லிம்
விக்கிமீடியா

Labels:

posted by சாதிக் @ 8:15 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
மலர்ந்தவை
About me
மாதம் வாரியாக
இஸ்லாமிய இணையதளம்
நன்றி
Linked to IslamKalvi.com

                     

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: 2996;்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது