பிப்ரவரி-14 உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம்.'காதல்' என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை.அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் கொண்டாடப் பட்டாலும்
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இருக்கும் உலகலாவிய முக்கியத்துவமும் எதிர்ப்பும் வேறு தினக் கொண்டாட்டங்களுக்கு இல்லை.காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள், அன்புக்கும் காதலுக்கும் எதிரிகளா? இல்லை! ஆணும் பெண்ணும் சமூக அங்கீகாரமற்ற அநாகரிக உறவு கொள்வதற்கும், கொண்டாட்டம் என்ற பெயரில் கலாச்சார/ பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழிவகைச் செய்வதையும்தான் எதிர்க்கிறார்கள்
மேற்கத்திய நாடுகளின் வர்த்தக நிருவனஙகளின் கதலர் தின சிறப்பு சலுகைகள் வயாகரா மாத்திரைகலை டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் எத்தனை வென்டுமானாலும் வாங்கலாம் (தினமனி) இப்போது புரிகிறாதா, காதலர் தினம் கொண்டாடபடும் நோக்கம்.
இந்தியாவில் கடந்த 10-20 வருடங்கள் வரை அறிந்திராத "காதலர் தினம்" எங்கிருந்து வந்தது? இதற்கு முன் இந்தியர்கள் காதலிக்காமலா இருந்தார்கள்? இரு உள்ளங்களுக்குள் இருக்க வேண்டிய காதலை ஒயின் ஷாப்பிலும், கேளிக்கை நடன விடுதியிலும், கடற்கரையிலும் கடை விரித்துக் கொண்டாடும் கலாச்சாரம், இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய ஒழுக்கச் சீர்கேட்டின் பலனல்லவா?
பிப்ரவரி-14 ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி முதல் நாளிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் படுகின்றன. புத்தாண்டையாவது நள்ளிரவில் கொண்டாடுவதில் கொஞ்சம் நியாயம் உண்டு. காதலர் தினக் கொண்டாட்டங்களும் இரவில் நடப்பது என்பது ஏன்? என்று சிந்தித்தால் இதன் உள்நோக்கம் புலப்படும்.ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் எப்படி அன்பை வெளிப் படுத்திக் கொள்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. மேற்கத்திய நாடு MTV வின் வருகைக்குப் பிறகு காதலர் தினக் கொண்டாட்டங்கள் தரம் தாழ்ந்தன. மது அருந்திவிட்டு ஆணும் பெண்ணும் கும்பலாக நெருக்கியடித்து உரசிக் கொண்டும், ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டும் ஆடி மகிழ்வதுதான் காதலுக்கு மரியாதையா?
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு வக்காளத்து வாங்குபவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி பொது இடங்களில் அநாகரிகமாக ஒழுக்கக்கேடாக நடப்பதை அனுமதிப்பதில்லை. காதலுக்கு மரியாதை என்ற பெயரில் மறைந்திருக்கும் தங்களுன் உள்மன வக்கிரத்தைக் காட்டவே எண்ணமே காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்றால் மிகையில்லை.
இதை நமது முஸ்லிம்கலும் கொன்டாடுவதும் புத்தாடை அனிவதும் ,வாழ்து அட்டைகள் வாங்க கடை கடையாக தேடி அலைவதும் மனவேதனையே. சவுதி, மாலேசியா போன்ற இஸ்லமிய நாடுகள் சில காதலர் தின கொன்டாட்டங்களை தடை செய்திருக்கின்றன.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக் கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (குர்ஆன் 17:32)