(நபியே) இவை(சிற்)சில ஊர்களின் வரலாறுகள் ஆகும் இவற்றை நாம் உமக்கு எடுத்திரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன சில(அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.(அல்-குர்ஆன் 11:100)
1990 ம் ஆண்டு ஆரம்பத்தில் மிக பிரபலமான பத்திரிக்கைகள், 'உபர்' என்ற பகுதியில் மணல் திட்டுகளுக்குள் சுமார் 12 மீட்டர் ஆழத்தில்."புதையுன்ட ஒரு அரபு நகரம் கண்டுபிடிக்கபட்டது" என்ற செய்தியை வெளியிட்டது. அது இறைவனின் கோபதிற்கு உள்ளான 'ஆத்' சமூதாயத்தினர் வாழ்ந்த நகரம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களாள் கண்டரிய பட்டது.
யார் அந்த 'ஆத்'சமூகத்தார்கள்?
நபி நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது 'ஆது' சமூகத்தினர்.
அவர்களுக்கு நபி ஹூத்(அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர்,அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் வேறு எந்த நாட்டிலும் படைக்க படவில்லை.
நபி ஹூத் (அலை) அவர்களும் மற்ற இறைதூதர்கள் போல இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைதப் போது. அவர்கள் அதை ஏற்காததும் அவர்களின் பதிலையும் குர் ஆனில் அல்லாஹ் கூருகிறான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது'' நீங்கள் (இறைவனை) அஞ்ச மட்டீர்களா? '' என்று கூறிய போது
'நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய (இறை) தூதன் ஆவேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.
'மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்கு கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
'நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?''
'இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று,(அழகிய வேலைப்பாடுகல் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கிறீர்களா?.''
'' இன்னும், நீங்கள்(எவரையும் ஏதங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல பிடிக்கின்றீர்கள்.
'எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.''
ஆனால் 'ஆத்' சமுதாயதினரின் பதிலோ
(இதற்கு) அவர்கள் '' நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டிமே) எங்களுக்கு சமம்தான்'' எனக் கூறினார்கள்.
'இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
'' மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மா ட்டோம்.'' (இவ்வாறு கூறி) அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள் ஆதலின் நாம் அவர்களை அழித்தேம் நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. (26:124-140)
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான்,
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதும்,'' இது நமக்கு மழையை பொழியும் மேகமாகும்'' என கூறினார்கள் ''அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அது தான்(இது கொடுங்)காற்று
இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது.(46:24)
ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டுவரபடுவது அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர் ஏனெனில் பாலை மணல் வெளியில் உருவாகும் சுழல் காற்றானது தொலைவில் இருந்து பார்பவைகளுக்கு அடர்ந்த மழை தரும் கார்மேகங்கள் போலவே கட்சி அளிக்கும். ஆராய்சியாளர் டோ(Doe) அவர்கள் கூறுகையில் , முதல் அரிகுறியாக மணல் ஆயிரம் அடிகளுக்கு மேல் கற்றில் உயர்த்த பட்டு நீண்ட சுவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும், பின்பு கற்றின் வேகம் அதிகரித்து வட்ட வடிவில் சூராவளி பெரும் ஓசையுடன் சுழழும். மேலும் அல்லாஹ் திருமறையில்
இன்னும்,ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்,எனவே அந்த சமுகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களின் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (69: 6,7,8)
மீளவே முடியாத பயங்கரமான சுழன்று அடித்த மணல் காற்றினால் அழிக்கபட்டு அச்சமுதாயத்தினர் மண்ணில் உயிருடனே புதையுண்டு போனார்கள்.
அகழ்வராய்ச்சியில் அந் நகரம் கண்டுபிடிக்கபட்டதை காண்போம், நிக்கோலக் க்லாப் இவர் ஒர் அனுபவமிக்க தொல்பொருள் ஆரய்ச்சியாளர் மட்டுமின்றி, திருமறையில் கூறப்பட்ட'ஆத்' சமூகத்தார் வாழ்ந்த(யுபர்) நகரை பெரும் முயற்சிக்கு பிறகு கண்டுபிடித்தவர் கூட, அதற்க்கு அவர் இரண்டு வழிகளில் தன் முயற்சியை மேற்கொன்டார். ஒன்று NASA மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை சாட்டிலைட் உதவியுடன் படம் பிடிக்க விண்ணப்பித்தார், இரண்டாவதாக கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான வி ளங்கங்கள்(manuscripts) பற்றி படிக்களானார்,எப்படியாவது அந்த நில அமைப்பின் வரைபடத்தை கண்டுபிக்கவேண்டும் என்பதின் முயற்சியின் பலனாக, கி.பி 200 ஆண்டு கிரீக்-எகிப்த் புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் அவருக்கு கிடைத்தது. அதற்கிடையில் NASA வில் இருந்து அவர் கேட்ட சாட்டிலைட் புகைபடம் கிடைக்கவே.அதில் குறுப்பிட்ட நில அமைப்பில் நிலத்திலிருந்து வெரும் கண்களால் காண முடியாத, முழு நில அமைப்பையும் வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிய கூடிய நீண்ட வால் போன்ற தடம்(caravan) காணபட்டது, அவரிடம் இருந்த பழைய வரைபடத்தயும் NASA வில் இருந்து கிடைத்த வால் பேன்ற அமைப்பான புகைபடத்தயும் வைத்து, குறுபிட்ட அந்த பகுதியில் ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
இருதியாக திருமறையில் கூறபட்ட 'ஆத்' சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுன்ட நகரம் தோன்டும் பனி தொடங்கியது. சரி.. அந்த நகரம் 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? அந்த நகரம் தோன்டும் பனி பாதி நிரைவடைந்த நிலையில் அது 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என கண்டறியபட்டது ,அகழ்வாரய்ச்சியா ளர் Dr.ஜரின்ஸ் கூருகையில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இது 'இரம்' நகரம் என்பதற்க்கு சான்றாகும் ஏனெனில்,' இரம்' நகரம் உயரமான் தூண்களை உடையதாக இருக்கும் என்று திருமறையில் அந்த நகரை பற்றி இறைவன் குறுப்பிடுகிறான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படக்கப்படவில்லை. (89:6-8)
மேலும் ஏழு இரவுகளும், எட்டு பகலாகவும் அவர்கள் மீது மணல் காற்றால் சூழபட்டார்கள் என்ற இறை வசனத்தின் படி. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.
'ஆத்' சமுதாயத்தை ,நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக, வல்ல இறைவன் திருமறையில் கூறுகிறான்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாமாகப் பெருமையடித்துக் கொண்டு,'' எங்களை விட வலிமை மிக்கவர்கள் யார்?''என்று கூறினார்கள் அவர்களை படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (Surah Fussilat:15)
எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு, அவனின் கோபதிற்க்கு ஆலாகாத இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற சமுதாயமாக நம்மை ஆக்கவேண்டும் என் அல்லஹ்வை பிராத்திப்போமாக.
அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்ட பொழுது, அமைதியாக குர்ஆனை சுட்டிகாட்டினார்கள் நபிகள் நாயகம்(ஸல்) ,இது பல விதங்களில் ஒரு மிகப் பெரும் அற்புதமே, உதாரணத்திற்கு இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், (ஒட்டகத்தை பார்க்கவில்லையா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது-அல்குர்ஆன் 88:17) வாருங்கள் பதிலைப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக 'பரிணாம வளர்ச்சி' என்ற பைத்தியக்கார வாதத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது மரத்திலிருந்து இலையை மேய்வதற்காக தலையை உயர்த்தி முயற்சி செய்த ஒரு ஆட்டின் செயல், அதன் குட்டியின் மீது பிரதிபலிக்க, நீண்ட கழுத்தை கொண்ட ஆடு பிறந்தது. பிறகு தலைமுறைகள்(மாறி...மாறி...மாறி..) நாம் இன்று காணும் ஒட்டகச் சிவிங்கியாக மாறியது. அது போல் தான் மனிதனும் குரங்கிலிருந்து மாறியவன் என்ற அந்த வாதம். மற்றவைகளை பற்றி ஏதவது கிறுக்குதனமாகவாவது விளக்கம் கொடுக்கும் இந்த வாதன், ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்தி மாறி தற்போது உள்ள நிலையை அடைந்தது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்று வரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு அணுவுக்கும் பின்னாலும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். இந்த ஒட்டகம் ஒன்று போதும் அதை நிரூபிக்க, பாலைவனத்து அரபியைகளால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கபடும் இந்த அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
படைத்தவனை பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் போது அதை திமிலாக்கிக் கொள்கிறது (45 kgs எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக, உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவசிக்கிம் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கறது.
உணவு மட்டும் கிடத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் சொய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீர் பத்து நிமிடகளுக்குள் குடித்து விடும்(pump).
குடிக்கும் நீரை இரத்ததின் சிவப்பு அணுக்களில் ஏற்றிக் கொள்கிறது. அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரித்து இடமளிக்கிறது. குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் வட்ட வடிவாக இருக்கும்.ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். மனிதர்களுக்கு உடல் 12% நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் ஒட்டகம் 40% இழந்தால் கூட எந்த பதிப்பும் இல்லாமல் வாழும். நீரிழப்பினால்ீடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன்) இரத்தம் பாகு நிலைக்கு வந்துவிடும். அதன் காரணத்தால் உடல் வாழ தேவையான இதமான சூட்டை தொலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம்( Explisive Heat Death) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகய்த்திக்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையுமே தவிர, அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும். நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அலவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.
அதன் உடல் சூடு 104 F டிகிரியை அடைய வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு வியர்வை வரும். அது வரை வியர்காது.(மனிதர்களுக்கு 98 F டிகிரி க்கு மேலே போனால் ஜுரம் என்று பெயர்)
ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிக பட்சமாக தாது கழிவுகள் 8 சதவிகிதம். 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40 சததிற்கு அதிகமாக கழிவும். குறைவான் நீரும் இருக்கும். அந்த அளவிற்கு குறைந்த அளவு நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.(நம்முடையதாக இருந்தால் கல் அடைப்பு ஏற்பட்டு வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சக்தி குறைய ஆரம்பித்தால், சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்து கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம்.
மற்ற பிராணிகளிம் (மனிதன் உட்பட) மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைபடும். ஒட்டகத்தின் மலத்தை பொட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்துவிடலாம் என்கிறார் மிருக ஆராய்சியாளர் டேவிட் ஆட்டன்பரே, அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. நம்முடையை மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனெற்றால் மற்ற எதற்க்கு இல்லத விசேச மூக்கு அமைப்புதான் காரணம். அதன் மூக்கிற்குள் அமந்திருக்கும் அடுக்கடுக்கான் திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேறும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது.
கடுமையான வெப்ப காளங்களில் உண்பதை குறைத்து கொண்டு உடம்பை இதமாக வைத்து கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படித்து கொள்ளும். நிழல் இல்லையென்றால் சூரியனை நேக்கி உடம்பை வைத்துகொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உலலில் படும்படியாக அதன் உடம்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது.அதற்கு காரணம் முட்டை வடிவான அதன் உடல் அமைப்பு ஆகும். ஒட்டகங்கள் கூட்டங்கூட்டங்களாக பிரிந்து கொண்டு நெருங்கிக் கொள்ளும். ஏனெனில் உடல் சூட்டை சுற்றுப்புற காற்றின் சூட்டை விட குறைவாக வைத்துக்கொள்ளும்.
அதன் உடலில் படர்ந்தது போல உள்ள உரோமங்கள் உடல் சூட்டை வியர்வையின் உதவி இல்லாமல் வெளியேற உதவுவதோடு வெளிசூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்து கொள்கிறது. ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளிம் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும். இப்படியாக . சுவாசம், சிறுநீர்,வியர்வை,எச்சில் என்று அதன் மூலமாகவும் ஒரு துளி நீரை கூட வீணாக்கிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது. சரி, நீரை பார்த்தோம் மணலுக்கு போவோம் வாருங்கள்.
மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கிறது..ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது ( உதாரணம் Snow Shoes ஆகும்) அதன் இரு குழம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 680 Kg எடையுள்ள ஒட்டகம் 450 kg வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது(நாம் சில அடிகள் நடந்தால் நாக்கு தள்ளிவிடும்) குட்டி போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் ( Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணாலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகிறது
மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு. அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்னை பாதுகாக்கிறது. அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது(Sun Class). ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம். பாலைவன்த்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்க்கு அதிகமான் நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
எங்கேயாவது தூரத்தில் உணவோ, நீரோ கிடைக்கும் பாலைவெளியில், அதை சிரமமில்லமல் தேடுவதற்கு அதன் நீண்ட கழுத்து(12 அடி) உதவுகிறது. பாலைவனத்தில் அதிகமான முட்செடி தான் கிடைக்கும் . அதை மேய்வதற்கு அழுத்தமான ரப்பர் போன்ற (முட்களே உடைந்துவிடும் அலவிற்கு கடினமான) )உதடுகள் கொண்டது ஒட்டகம். கிடைத்ததை தின்றுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது. அதிவும் அபரிதமான அளவு வைட்டமின் 'சி' யுடன்.
சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், பசித்தலும் புல்லை தின்ன மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், பஞ்சம் என்றால் , மீன், இறைச்சி,தோல், எதையும் தின்றுவிடும்.
வியர்வை,எச்சில் ஆகட்டும் 99 சதம் நீர் இருக்கும்.கழிவுகளும் அபரிவிதமான நீரை கொன்டதாக இருக்கும். சுவாசத்திலும் நீர் வெளியாகிறது. இது ஒட்டகத்திற்கு எப்படி தொரிந்தது? இந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாக தன் உடலை அமைத்துக் கொள்ள தெரிந்த ஒட்டகத்த்ற்கு அறிவிருந்தால் எங்கேயாவது நீரும், உணவும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தை நோக்கி ஓடியிருக்கலாம்.(மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்) முட்டாள் ஒட்டகம் பாலைவனத்தில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்காது. சரி பாலைவன சூழ்நிலைக்கு ஏற்ப ஒட்ட்கம் தானாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றே வைத்துக் கொள்வோம். அதன் படி பாலைவனத்தில் வசிக்கும் மனிதன் இது வரை பாதி ஒட்டகமாக மாறி இருக்கவேண்டுமே?
படைப்பாளன் உண்டா? அல்லது பரிணாம வளர்ச்சியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
"தலையில் தொப்பியோ அல்லது துனியோ அனியாமல் தொழும் ....எவரும் இப்பள்ளில் தொழ அனுமதிக்க பட மாட்டார்கள்,மீறி தொழுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும்"
மேற்கண்ட அறிவிப்பு பலகையை தமிழகத்தின் பெரும்பாளான பள்ளிகளில் காணமுடியும். தொப்பி அனிவது இஸ்லாதின் கடமையான ஒன்று என்பது போல சித்தரிக்கும் இது போன்ற விசம பிரசாரத்திக்கு தமிழக மார்க அறிஞர்கள், உலமாக்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள எப்படி அங்கீகரிக்கிரார்கள் என்பது விளங்கவில்லை. இத்தகைய விசம பிரசாரத்தினால் சமுதாயத்தில் ஏற்பட்டிக்கும் சண்டை,சச்சரவு,பிரிவினைதான் எத்தனை... எததனை.... . தொப்பி அனிவது தொழ அனுமதிக்க முடியாத அலவிற்கு அத்தனை வலியுறுத்தபட்ட கடமையான ஒன்றா? தன் மானத்தை மறைத்து கொள்ளவும் பருவநிலை மாற்றங்களில் இயற்கையின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாக்கவும் மனிதன் ஆடையை அனிய தொடங்கினான். பருவ காலங்கள் மாறி மாறி வருவதால் ஆடைகலும் அவ்வாரே அனிய வேண்டியா கட்டாயம் ஏற்பட்டது . குளிர் பிரதேசங்களிள் வசிப்பவர்கள் மிக தடிமணான ஆடைகளை அனிகிறார்கள். வெப்பமான பிரதேசன்களிள் வாழ்பவர்கள் மெல்லிய ஆடைகலை அனிகிறார்கள் மனிதனின் உடல் உறுப்புகளை மறைக்க பிரத்தியோக ஆடைகளை(கை உறை, கால் உறை) போன்று , வெப்பத்தில் இருந்தும், கடும் குளிரில் இருந்த்தும் தலையை பாதுகாக்கும் கவசாமாக தொப்பி என்ற ஆடையை மனிதன் அனிய தொடங்கினான்.
குளிர் பிரதேசங்களில் குளிர் ஊடுருவாமள் காதுவரை மூட பட்ட தொப்பியை அணிய தொடங்கிய மனிதன் வெப்பமான பாலைவன பிறதேசங்களிள் வீசும் மணல் காற்றிலிருந்து தலையை பாதுகாக்க தொப்பி மட்டும் பாதுகாப்பில்லை என்ரு அதன் மேல் துண்டையும் சுற்றிகொள்ள வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது. பாலை வனங்களிள் வெப்பம் மற்றும் குளிர் இரண்டும் கடுமையாக இருப்பதால் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு தேவை என்று தொப்பியை அனிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாலைவன பிரதேசமான அரபு நாடுகளில் முஸ்லிம்கல் அனியும் ஆடை வகையான தொப்பி இன்று இஸ்லாத்தின் அடையாலமாக மாற்றபட்டு வணக்க வழிபாடுகளில் கண்டிப்பாக தொப்பி அனிந்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் உலமாக்கள் என்று தங்கலை சொல்லிகொள்பர்கள் கூரும் உப்புசப்பில்லாத காரணங்கள்:
1. தொழுகையின் போது தலை மறைக்க பட வேண்டிய ஒன்று எனவே தொப்பி அனியவேண்டும்
இவர்கள் கூருவதுபோல் எந்த ஒரு ஆதரத்தையும் திருமறையிலோ, நபி(ஸ்ல்) அவர்களின் பொன்மொழியிலோ காணமுடியாது.
2.எல்லோரும் தொப்பி அனிந்து தொழும் போது ஒழுங்கு (unifrom)கடைபிடிக்கபடிகிறது
அப்படியானாள் இது ஆடை விசயங்கலுக்கும் பொருந்துமல்லவா? , எலோரும் ஒரே நிரத்தில் ஆடை அனிந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் அவ்வாரு இவர்கள் மார்க தீர்ப்பு கொடுத்தாலும் ஆச்சர்யபடுவதிர்கில்லை
3. தொப்பி அனியாமல் தொழுபவர்களாள் மற்றவற்கள் கவனம் சிதற்கிறது எனவே தொப்பி அனிய வேண்டும்.
தொப்பி அனியாததாள் மற்றவர்கள் கவனம் எவ்வாரு சிதரும்? வேண்டுமாளால் அப்பள்ளி நிர்வாகிக்கு தங்கள் அறிவிப்பை மீறி ஒருவர் தொப்பி இல்லாமல் தொழுகிரார் என்ரு அவருடையா கவனம் சிதரலாம்.
இன்றைய கால கட்டத்தில் நமது சமுதாயம் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு தனி தனி பிரிவுகளாக பிரிந்து எதை சாதிக்க போகிரோம் என்ரு அவர்கலுக்கே தெரியாமல் தவித்துகொண்டிருக்கிரார்கள். அவர்ளை ஒருங்கினைத்து வழிநடத்தவேண்டிய நமது தமிழ்க உலமாக்கள் , யார்மீதோ கொண்ட விருப்பு வெருப்புக்கலை, கருத்து வேருபாடுகளை மார்கம் என்ற பெயரில் வெளிபடுத்தி நம் சமுதாயத்தை மேழும் சீரழிக்க போட்டி கொண்டிருகின்றனர்.
இது போன்ற அற்ப விசயங்கலுக்காக அல்லாஹ்வின் பள்ளிக்கு வரும் அடியார்களை தடுப்பது அறிவீனம் மற்றுமின்றி அல்லஹ்வின் கடும் கோபத்திக்கு ஆலாககூடியது, திருமறையில் இறைவன் கூருகிரான்
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரை சொல்லி துதிப்பதை தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைகாரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வின் இழிவுதான் மேலும், மறுமையில் இவர்கலுக்கு கடுமையான வேதனையும் உண்டு (2:114)
மேற்கன்ட தெல்ல தெளிவான இறைவனின் வசனம் நமது உலமா பெருமக்களுக்கு கான கிடைக்கவில்லையா? இன்று அரபு நாடுகளில்கூட ஒழுக்க சீரழிவுகள் பெருகிகொண்டுதான் இருக்கிரது இருப்பினும் இறை வணக்கத்தில் யாரும் யாரையும் கட்டுபடித்துவது கிடையாது, உலகில் பலதரபட்ட மொழி,பழக்க வழக்கங்கள் கொண்ட மக்களும் ஒரே பள்ளிவாசலில் தொழும்போது நீ வணங்குவது முற்றிலும் தவறு என்று சொல்லி பள்ளிவாசலை விட்டுத் துரத்துவது கிடையாது, ஏன் இங்கு மார்க அறிஞர்கள், உலமாக்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு தமிழ் நாட்டு உலமாக்கள் போன்ரு போதிய மார்க அறிவு இல்லையா?
இங்கு ஒரு சட்டம் இயற்றினால் ஏன் என்று யாராலும் கேள்வி கேட்ககூட முடியாது அப்படி இருந்தும் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் கான படும் அறிவிப்பு பலகை போன்று இங்கு எங்கும் காணமுடியவில்லையே ஏன்?
இன்றைய நூற்றான்டில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவும் மார்கம் (135%) நமது இஸ்லாம் தான். ஓவ்வோரு நாளும் ஆயிரகணக்கிள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வாக ஏற்றுகொள்கின்ரனர். இதக்கு முக்கிய காரனமாக இஸ்லாத்தில் மற்ற எந்த மதத்திலும் இல்லாத சகோதரதுவம், இறை வேதம் என்பதை நிருபிக்கும் அறிவியலோடு ஒத்துபோகும் குர் ஆன் கூரும் உன்மை,சாதி வேருபாடற்ற சமத்துவம்.. இப்படி சொல்லிகொண்டே போகலாம். இதில் முஸ்லிம்கலின் நடவடிக்கைகலும் மற்ற மததவர் இஸ்லாத்தை ஏற்பதர்க்கும், எதிர்பதற்க்கும் முக்கிய காரணங்களிள் ஒன்றாகிறது எனவே இதுப்போன்ற இஸ்லாத்தில் வலியுருத்தபடாத , சம்பந்தம் இல்லாத விசயங்களில் முக்கியதுவம் கொடுத்து சமுதாயம் பிளவுபட ஒரு காரணமாக ஆகாமல் இனிவரும் காலங்களில் நமது தமிழக உலமாக்கள் இருக்கவேண்டும்.
உலமாப்பெருமக்களே, மார்க்க அறிஞர்களே இங்கே சொல்லப்பட்ட கருத்துக்கலை நன்றாக ஆராய்ந்து எந்த முடிவுக்கும் வாருங்கள்.மீண்டும், மீண்டும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கிணற்றுத் தவளைபோல் செயல் படவேண்டாம்.
இனிமேலும் மேற்சொன்ன வாசகங்கள் பள்ளிவாசல்களில் நீடித்துக்கொண்டிருப்பதை சம்பந்தப்பட்டவர்க்ள் தடுப்பதுதான் மிகநல்லது. உண்மையான இறைனேசர்கள் இதைத்தான் விரும்புவார்கள். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் மன்னித்து நம் அனைவறையும் ஈருலகிலும் மேன்மையோடு ஆக்கிவைத்து அவனது வல்லமை மிக்க மகத்தான சொர்க்கத்தில் சிறப்பான இடத்தைத்தந்து காப்பாற்றிவைப்பானாக ஆமீன்.
அல்லஹ்வின் மஸ்ஜிதிகளை பரிபாலனம் செய்யகூடியவர்கள், அல்லாஹ் மீதும் இருதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையை கடைபிடித்து ஜாகாத்தை (முறையாக) கொடுத்து அல்லஹ்வை தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம்- இத்தகையவற்கள்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவற்களிள் ஆவார்கள் (9:18)
நபி(ஸல்) பற்றி அனிமேசன் திரைபடம்(Mohammad "The Last Prophet")
Saturday, March 3, 2007
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகிலேயே முதல் முறையாக முழுநீள அனிமேஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் புகழ் பெற்ற இஸ்லாம் சேனல் மற்றும் அமெரிக்காவின் Fine Media Group இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு Mohamed(PBUH): The Last Prophet - இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) என்று பெயரிடப்பட்டுள்ளது
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்திறங்கிய நிகழ்வுகள் உள்பட, தூய இஸ்லாத்தை அரேபிய மண்ணில் விதைக்க நபியவர்கள் செய்யும் முயற்சிகளும் அதில் வழி நெடுகிலும் சந்தித்த துயரங்களையும் விவரிக்கிரது இத்திரைப்படம்.
இறைத்தூதரை ஓவியமாக வரைதலும் கற்பனை உருவகங்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் - இறைத்தூதரின் உருவகம் இல்லாமை என்பது ஒரு குறையாக பார்ப்பவர் மனதில் தெரிந்தாலும், இஸ்லாத்தின் ஆரம்பகால சரித்திரத்தை அழகாக விளக்கியிருக்கும் முறைகளினால் ஆழமான ஒரு மன நிறைவைப் பெற முடிகிறது.
நபிவழித் தொகுப்புகளின் அடிப்படையில் சம்பவங்கள் அமைந்திருக்கும் இத்திரைப்படம், இஸ்லாமிய வரலாற்றைக் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் வகையில் எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
புதிதாக இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கும் இஸ்லாத்தை அறிய விரும்புவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் வியப்பில்லை.